000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சோழ அரசர் குல ஆண்மகன் |
300 | : | _ _ |a அரச உருவம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a கருவறை விமானத்தின் வடபுற பஞ்சரக் கோட்டத்தில் நிற்கும் சோழர் காலத்திய ஆடவன் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கருவறையின் வடபுற பஞ்சரக் கோட்டத்தில் சோழர் குல ஆடவர் ஒருவர் சமபாதத்தில் நிற்கிறார். தலையில் ஜடாமகுடம் போன்று தெரிகிறது. நீள் காதுகளில் வியாழ குண்டலம் (பாம்பினை வளைத்து குண்டலம் போன்று அமைத்தல்) போல் தெரிகிறது. கழுத்தில் சரப்பளி, சவடி அணிந்துள்ளார். வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. முப்புரி நூல் இடமார்பின் வழியே உடலின் பின்புறம் செல்கிறது. வலது கையை வரத முத்திரையாகவும், இடது கையை இடது தொடையில் வைத்தவாறும் (ஊரு முத்திரையாகவும்) உள்ளார். கைகளில் தோள் வளையும், மணிக்கட்டுப் பகுதியில் மூன்று வளையங்களும் காட்டப்பட்டுள்ளன. கை விரல்களில் நடுவிரல் தவிர பிறவற்றில் வளையங்கள் காணப்படுகின்றன. அரையாடையாக மரவுரியாடை இடையில் அணிந்துள்ளார். முகப்புடன் கூடிய இடைவார்ப் பட்டை இடையில் அணிந்து, அரைப் பட்டிகையிலிருந்து ஆடை முன்புறம் மடிந்து தொங்குகிறது. மெல்லிய உடல்வாகுடன் இளைஞராய் இவர் தோற்றமளிக்கிறார். |
653 | : | _ _ |a சோழர் குல ஆடவன், சோழ நாட்டு வீரன், சோழர் கால ஆண்மகன், கும்பகோணம், குடந்தைக் கீழ்க் கோட்டம், தஞ்சாவூர், முற்காலச் சோழர் கலைப்பாணி, சோழர் கலைகள், முதலாம் ஆதித்த சோழன், ஆதித்தன் கலைப்பாணி, முதலாம் ஆதித்தன் கற்றளி, சோழ மண்டலம், குடந்தைக் கீழ்க்கோட்டம் கோட்டச் சிற்பங்கள் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
914 | : | _ _ |a 10.95847464 |
915 | : | _ _ |a 79.37757388 |
995 | : | _ _ |a TVA_SCL_000166 |
barcode | : | TVA_SCL_000166 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |